நாங்கள்
யாம் ஒரு கனவுலகம் கறபனை கண்டோம் !
அங்கு பசியில்லை ! பட்டினியில்லை ! மனதில் ரணமில்லை ! துரோகமில்லை ! கொலையில்லை !
அங்கு மானுட மனமெங்கும் அன்பும், வாழ்வெங்கும் அறமும் நிறைந்து காணப்படும் !
அத்தகையதொரு உலகை படைக்க வல்ல அடைய வல்ல சக்தியை தேடித் தலைப்பட்டோம் !
அச்சக்தி எங்கூர் காளியாத்தாளுக்கில்லை எனக் கண்டோம் !
யேசுவுக்கில்லை இறை தூதனுக்கில்லை எனத்தெளிந்தோம் !
புத்தம், சித்தம், சமணம், சைவம், வைணவம் எங்கும் இல்லை அச்சக்தி !
இறுதியில்
கண்டடைந்தோம் ! அத்தகைய சக்தியை !
அது புரியா புதிர்களை தகர்த்தெறிந்தது !
அறியாதவற்றை அறியக் கொணர்ந்தது !
அது ஒரு அறிவியல் முறை!
அது ஒரு கண்டுபிடிப்பு !
அது ஒரு கலை !
அது ஒரு ஓவியம் !
அது ஒரு அழகிய கவிதை!
அது ஒரு புதையல் !
அது எம்மக்களின் அடிமை விலங்குகளை தகர்த்தெறியும் சம்மட்டி !
சொர்க்கத்தை இம்மண்ணில் படைக்க வல்ல பூதம் !
அதன் பெயர் மார்க்சியம் !
அது லெனினியம் !
அது கம்யூனிசம் !
நெடுங்காலதிற்கு முன் “spartacusin” இன் இதயத்தில் கிளம்பிய அந்த பூதம் ! இன்று வரை உறங்கியதில்லை !
இனி உறங்கிடப்போவதுமிலை !
எம் மக்களின் எதிரிகள் அப்பூதத்தை உறங்க விடுவதுமில்லை !
வாருங்கள் தோழர்களே,
வலையுலகில் தெளிவான தடத்தை பதித்திருக்கிறீர்கள். இலக்கின் இடைவெளியை மலைப்பாய் எண்ணாமல் பயணப்படுவோம்.
தோழமையுடன்
செங்கொடி
மார்க்சியத்தை அதற்கேயுரிய கம்பீரத்துடன் வருணித்தமைக்கு வாழ்த்துக்கள்!
வினவு
Thanks for ur comment.