Skip to content

வோட்டு போடாம இருந்தால் மட்டும் போதாது ! மாற்றத்துக்கு அணி திரளணும் !

மே9, 2009

மனசே கஷ்டமா இருக்குது தம்பி !
தின்ம் தினம் TVல பார்துனு தானே இருக்கோம் ! சின்ன் சின்ன குழந்தையெல்லாம் ஒரே ரத்தமா கிடக்குது !
ஏதோ நீ இந்த வெயில்ல வந்து இப்பிடி பேசிட்டு இருக்கற !
பெரியாரே சொல்லிட்டு போயிருக்காரு ! தமிழ்னாட்டு மக்கள் ஆட்டு மந்தை ! ஜென்மதுக்கும் திருந்தாதுன்னு !
ஏதோ நீ புது கட்சியா இருக்கற ! யாருக்கும் வோட்டு போட வேணாங்கிற !
சரி நோட்டீசை கொடு ! அது என்ன புத்தகம் ! அதையும் குடு படிச்சி பாக்குறேன் !
நீ வந்து இந்த வெயில்ல இவ்வளவு பேசியிருக்க ! தண்ணி சாப்பிட்டுடு போ!
நான் யாருக்கம் வோட்டு போடலை! எங்க வீட்டுலயும் யாருக்கும் வோட்டு போடதன்னு சொல்லுறேன் ஒகே வா !!

— தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரதின் போது ஒரு முதியவர்

வோட்டு போடாம இருக்கறது முக்கியம் இல்லீங்க ! வோட்டு போடறதுக்கு பதிலா என்ன செய்யணும் அப்ப்டீங்கறது தான் முக்கியம் ! நீங்க வாங்குற ஒரு ரூவா ஷாம்பூல கோட 10 பைசா அரசாங்கதுக்கு வரியாப்ப் போகுது !

அவ்வளவு பணத்தையும் ஆண்டு அனுபவிக்க தானே இந்த பொறுக்கிங்களுக்குள்ளா இத்த்னை போட்டி ! அதுக்கு ஆப்பு வக்கிற மாதிரி ஒரு ஜன நாயகம் வந்ததுன்னு வையுங்க ! இவனுங்க எவனும் நம்மளை ஏமாத்த முடியாது ! அந்த மாதிரி ஒரு ஜன நாயகம் வரணும்னு தான் நாங்கள் பல காலமா உழைக்கும் மக்கள் , நாட்டுப்பற்றுள்ள மாணவர்கள், விவசாயிகள் , நல்ல அறிவுஜீவிகள் அப்படின்னு எல்லாரையும் சேர்த்துகினு இருக்கோம் !
உங்களை மாதிரி நல்லவர்கள் எங்களை மாதிரி இயக்கங்களுக்கு ஆத்ரவு தந்தீங்கன்னா சீக்கிரம் ஒரு நல்ல மாற்றம் வரும் ! வரணும் !

– இது நாங்கள்

ஓகோ அதனால தான் புதிய ஜனனாயகனும் பேரு வச்சிருக்கீஙளா !!

சரி ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பிங்களா !

அய்யா வாழ்துக்காள் முக்கியம் இல்லீங்க ! உண்மையில் இந்த சமூகம் மாறணும்னா நாம் களத்துல இறங்கி போராடணும் ! இவ்வளவு கொள்ளை அடிச்சி வச்சிருக்கற கருனா நிதி, ஜெயலலிதாவே இந்த வெயில்ல ஊர் ஊரா போய் பேசறங்கன்னா நம்மை நாம் காப்பாத்திக்க எவ்வளவு வேலை செய்யணும் ! யோசிச்சி பாருங்க ! திரும்ப சந்திப்போம் ரொம்ப நன்றிங்க !

தம்பி ஒரு நிமிஷம் இந்த தெருவுல எம் மகன் வீடு இருக்கு அங்கயும் போஇ சொல்லிட்டுப் போ ! இரு நானும் வர்றேன் !

-( இது வரை அய்யாவாக இருந்த அவர் இப்போது தோழராக ) சரிங்க தொழர் என்று நாமும் அவரை பிரச்சாரதுக்கு சேர்த்து கொண்டோம் !

அந்த தெருவில் சில வீடுகளுக்கு கூடவே வந்து தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் பற்றி அறிமுகம் செய்து வைத்தார் !

Advertisements
3 பின்னூட்டங்கள்
  1. தோழர்,

    மிகச்சிறப்பான பதிவு, இதைப்போன்ற நடைமுறை பதிவுகள் அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டவை.மேலும் நடைமுறையிலிருந்து ஒருவருக்கு எதையும் எளிதாக விளக்கிவிடலாம்.அச்சம்பவங்களை பலரும் கடந்து போயிருக்கலாம்,அல்லது அச்சம்பவங்களாக அவர்களே இருந்திருக்கலாம். கலகத்தில் எழுதப்படும் கதைகள் கூட நடைமுறையிலிருந்தவையே. இது போன்ற பதிவுகள் மிகவும் தேவை.மேலும் பலவற்றை படைக்க வாழ்த்துக்கள்

  2. ஆம். மதங்களைப்போல பெற்றோரின் கண்டிப்பால் நம்புபவர்களல்ல தோழர்கள், வாழ்வின் தோள்களிலிருந்து தடந்தோளுடன் வாழ்க்கைக்காக இறங்கி வருபவர்கள். அதற்கு வயது ஒரு பேதமல்ல.

    தோழமையுடன்
    செங்கொடி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: