Skip to content

சொல்லு மச்சி !

ஜூன்27, 2009

“பீ” ! அதாங்க மலம் !

என்ன இது ஆரம்பமே அருவருப்பா இருக்குனு நினைக்கிறீங்களா ?

ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ! பீ ன்னு சொன்னாவே ஏங்க அருவருப்பா இருக்கு ! தெரியல ! ஆனா இது பத்தி பெருசா ரிசர்ச் ஒண்ணும் பண்ண வேணாம் ! ஆனா அந்த பீ கூட காஞ்ச பிறகு “காஞ்ச பீ”எங்க ஊர்ல (சேலம் மாவட்டத்தின் ஒரு காஞ்சு போன கிராமம்) ஒரு அக்கா  (அருந்ததியர் சமுகத்தை சேர்ந்தவர்)  கூடையில அள்ளிகிட்டு போவாங்க (அப்போதெல்லாம் எங்க வீட்டுல கக்கூசு இல்லை ! ஊருக்கு வெளியில இருக்குற காட்டுல (பேரே பீக்காடு) தான் எல்லாம்). எங்கஅப்பாகிட்ட கேட்டதுக்கு அவரு சொன்னாரு அதை கொண்டு போயி காட்டுல கொட்டுனா நல்ல உரம்னு சொன்னாங்க ! அப்புறம் பனிரெண்டாம் வகுப்புல பயாலஜி படிச்ச பிறகு தான் தெரியும் நம்ம உடம்புக்கு தேவையில்லாத மீதி சத்துக்கள் மலத்தில் அப்படியே இருக்கும்னு.எங்க ஊரு பக்கம் ஒரு ஆசிரமத்துல கூட ஒண்ணுக்குல நிறைய தாதுக்கள் வெளி வரும்னும் அதையே ரிபீட்டடா குடிச்சி ஒரு சாமியார் உசுரோட இருந்தார்னும் சொன்னாங்க ! …….. நிற்க ! ::- ஆனா என்ன  இருந்தாலும் “பீ” அருவருப்பானது தான் இல்லீங்களா !

அன்னக்கி (இரண்டு வாரத்துக்கு முன்னாடி) அப்படி தாங்க ஒரு தோழரை சந்திக்க தாம்பரம் போயிட்டு திரும்பி கிண்டி வரணும். தாம்பரத்துல அவர்ட்ட பேசி முடிச்சிட்டு திரும்பி வர்றயில எனக்கு ஒரு ஆசை திடீர்னு ஆமாம் (அதுவரை நான் பயணம் செய்யாத ரூட்) கிழக்கு தாம்பரத்துல இருந்து வேளச்சேரி போயிஎன்னோட கல்லூரி நண்பர்களையும்  பார்த்துட்டு அப்படியே என் வீட்டுக்கு போயிடலாம்னு முடிவெடுத்துட்டு கிளம்பி வேளச்சேரி போயிட்டு விஜயநகர்லேர்ந்து என்னோட  மச்சிக்கு (கல்லுரியில் நான்கு வருடம் இருவரும் ஓருடல் ஈருயிர் தப்பு தப்பு மன்னிக்கனும் ஈருடல் ஓருயிர்)  போன்  போட்டேன். ஏதோ மாரியம்மன் கோவில் தெருவில் முனையில்  நிற்பதாக சொல்லி அலைந்து  திரிந்து நானும் சென்றடைந்தேன். தெரு முனையில் அப்படியே தூங்கி எழுந்து  வந்து நின்று கொண்டிருந்தான்.

நான்: மச்சி எப்படி இருக்க  !

மச்சி: நான் எல்லாம் நல்லா தான் இருக்கேன் !ஏன்டா இப்ப தான் ரூம்க்கு வழி தெரிஞசதா !

நான்:எங்கடா ! வரலாம்னு  தான் நேரமே இல்லை!

ஒரு வீட்டின் இரண்டாம் தளத்தி்ன் ஒரு வீட்டின் கதவை திறந்து விட்டவன் அப்படியே என்னை உள்ளே சென்று உட்கார சொன்னவன்  ஒரு நிமிஷம் மச்சி ! குடிக்க தண்ணி கூட இல்லை இரு வந்துடறேன் என்று சொல்லி விட்டு  ஒரு அஞ்சு நிமிசம்  கழித்து  ஒரு கேரி பேக்கில் தண்ணீர் பாக்கட்டுகளோடு வந்தான். நான்  முன்னறையில் அமர்ந்திருந்தேன். உள்ளே இன்னும் இருவர் பகல் மணி 12 வரை தூங்கி கொண்டிருந்தார்கள்.

மச்சி : அப்புறம் மச்சி ! ஏன்டாஎத்தனை முறை கூப்பிட்டேன் ஒரு முறை கூட வர மாட்டியா? இப்ப தான் உனக்கு வழி தெரிஞ்சதா?

நான்: அப்படி இல்லடா?எங்கடா ஏதோ   ஒரு வேலை இருந்துட்டே இருக்கு ? சரி அதை விடு வீட்டில அம்மா அப்பா சவு்க்கியமா? வேலை எப்படி போகுது?

மச்சி: நல்லா இருக்காங்க. வேலை அப்படியே  போகுது…. .  இன்னொரு விஷயம் நான் பைக் வாங்கியிருக்கேன் என்று கூறினான். கீழே நின்றிருந்த வண்டியை பார்த்து விட்டு மேலே வந்த பொழுது  உள் ரூமில் தூங்கி கொண்டிருந்த இருவரும் எழுந்திருந்தனர். அவர்களிருவரையும் மச்சி அறிமுகப் படுத்தி வைத்தான்.  ஒருவர் மச்சியுடன்  (Cognizant) வேலை பார்ப்பவர் என்றும் மற்றவர் அவருடைய collegemate என்றும் அவர் iNautix ல் வேலை பார்ப்பவர் என்றும் அறிமுகப்படுத்தி வைத்தான். என்னை கொஞ்ச நேரம் TV பார்த்திருக்க சொல்லி விட்டு அனைவரும் காலைக்கடன்களை மதியத்தில் முடித்தனர்.  பிறகு அனைவரும் சென்று அருகிலுள்ள ஒரு ஆந்திரா மெஸ்ஸில் ஒரு வெட்டு வெட்டி விட்டு வந்தோம்.  பிறகு சிறுது நேரம் TV ல் ஓடிக்கொண்டிருந்த படத்தை பத்து நிமிஷம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு

நான் : ஓகே மச்சி கிளம்பறேன். சாயந்திரம் கொஞ்சம் அப்படியே வெளியே போகணும்.  நீ  வீக் என்ட்ல என் ரூமுக்கு வரலாமில்லஎன்று கூறி விட்டு கிளம்ப முயன்றேன்.

மச்சி: மச்சி இரு !என்ன எப்போ பார்த்தாலும் இப்ப்டியே இருக்க! இரு சாயந்திரம்  போகலாம்.

நான்: இல்ல மச்சி போகணும்.

மச்சி: ஆமாம். அன்னக்கி சரவணன் கூட போன் பேசிட்ருந்தப்ப  உன்னப்பத்தி ஏதேதோ சொன்னான்!   ஏதோ இயக்கம் அப்ப்படி இப்படினு ! (கல்லூரியில் நன்றாக ஊர்  சுற்றிய போதே இவன் ரொம்ப ஜாலி பார்ட்டி! இவனிடம் நம்மை பத்தி பேசுவது வீண் என்று தான் அவன் போக்கிலேயே விட்டு விட்டு இதுவரை பேசாமலிருந்தேன்).

நான்: இல்லை மச்சி ! நான் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்துல இருக்கேன். அது வேலையா தான் கொஞ்சம் வெளிய போகணும்.

(உடனே உடனிருந்தவர்களில் ஒருவர் யாருங்க இந்த தா.பாண்டியன் கட்சியா ! இல்லை பிரகாஷ் காரட் கட்சியா ? )

நான்: இல்லங்க  பாஸ் ! இது ஒரு புரட்சிகர இயக்கம் ! நாங்க எலக்சன்ல நிற்க மாட்டோம். இந்த மொத்த செட்டப்பே சரியில்ல ! அதுல போய் ஒண்ணும் செய்ய முடியாது!

பாஸ் 1 :  ஓஹோ  BOYS  படத்துல வருமே அந்த மாதிரி தீவிரவாத இயக்கமா?

நான்: (ஆஹா எத்தனை பேர் இதே படத்தை சுட்டி காட்டுறாங்க! )  தீவிரவாதம்னா என்னங்க?

பாஸ்1: இந்த நக்சலைட் இயக்கம், முஸ்லிம் தீவிரவாதம் அப்படி !! ?

நான்: பாஸ் எங்க இயக்கம் கூட நக்சலைட் இயக்கம் தான் ! ஆனா அது எப்படி தீவிரவாத இயக்கம்னு சொல்லுறீங்க ?

பாஸ்1: என்னங்க அவங்க தீவிரவாதிகள் இல்லாமல் வேற என்னங்க ? எப்போ பார்த்தாலும் எங்கெயாச்சும்  குண்டு வச்சி நாலு பேரை கொல்லுறது ! ரயில்ல குண்டு வக்கிறது ! அதெல்லாம் சுத்த வேஸ்ட் !! அகிம்சை வழியில் தான் போராடணும். அப்ப தான் “விண்” பண்ண முடியும்.

நான்: (ஒஹோ பரவாயில்லையே ஏதோ பேசறார்ன்னு ) ஆமாங்க எனக்கும் வன்முறை மேல் நம்பிக்கை இல்லை.எங்க அமைப்பு கூட  வன்முறை இல்லாம தான் இது வரையிலும் போராடின்னு இருக்கோம். இங்கெ பாருங்க நான் என்ன வெடிகுண்டா வச்சிருக்கேன்!

பாஸ்1: அப்ப எப்படிங்க இந்த கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா அவங்களோட அல்லக்கைங்களை எல்லாம் ஜெயிக்க போறிங்க ?

நான்: ஒரு நிமிஷம் பாஸ் கருணாநிதி,ஜெயலலிதா, சோனியா அப்புறம் அந்தந்த கட்சியோட MLA,MP, மேயர், உள்ளூர் பிரசிடன்ட் இவிங்களை எல்லாம் தேர்ந்தெடுத்தது யாருங்க?

பாஸ்1: நம்ம ஜனங்க தாங்க! நம்ம மக்கள் இப்படி இருக்கற வரைக்கும் இந்த மாதிரி ஊரை ஏமாத்துறவிங்க இருந்துட்டு தான் இருப்பாங்க!

நான்: சூப்பர் பாஸ் ! பாயிண்டுக்கு வந்துட்டீங்க! நம்ம மக்கள் இப்படி இருக்கிற வரைக்கும். அதே மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டா ? அயோக்கியனுங்களை தூக்கியெறிய ஆரம்பிச்சிட்டா?

பாஸ்1: அப்படி ஒண்ணு நடந்துச்சீன்னா இவனுங்க கதை அதோகதி தான் !

நான்: சரிங்க அப்படி மக்களை மாத்துறது தான்எங்களோட வேலைங்க ! ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இப்படி சமூக மாற்றத்துக்கு போராட அவங்களை தயார்படுத்தறது தான் எங்க வேலைங்க! சொல்லுங்க நாங்க தீவிரவாதியா? நாங்க செய்யுறது சரி தானே?

பாஸ்1:  ம்ம். ஓ.கே

நான்: ஓ.கே சொல்லுறது இல்லிங்க! அப்படி இந்த மக்களை மாற்ற, மக்களுக்கு உண்மையை புரிய வக்க நாங்க “புதிய ஜனநாயகம்” ன்ற மாச பத்திரிக்கை நடத்திட்டு வர்றோம். படிச்சி பாருங்க !

என்று கூறி விட்டு அம்மாத புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன்.

நான்:   படிச்சி பாருங்க ! உங்களை பொறுத்த வரைக்கும் இந்த சமூக மாற்றத்துக்கு என்ன பங்களிப்பு செய்ய போறிங்க?

பாஸ்1: செய்யாம என்னங்க ! ஏதாச்சும் செய்யணும்னு ஆசை இருக்கு !எங்க அப்படியே  பொழப்பு ஓடிட்டு இருக்கு!எதுனா ஹெல்ப் வேணும்னா கேளுங்க !

நான்: சரி ஓ.கேங்க நான் கிளம்பறேன்.  அருகிலிருந்த மற்றொருவர் அதற்குள் உட்கார்ந்தவாறே தூங்கிக்கொண்டிருந்தார்.

மச்சி: இரு மச்சி! நானே பஸ் ஸ்டாப்ல ட்ராப் செய்றேன்.

விஜயநகர் பஸ் ஸ்டாப்பின் பின் பக்கம் வண்டியை  நிறுத்தி விட்டு இருவரும் டீ சாப்பிட்டோம். அப்போது

நான்:என்ன மச்சி! நீ ஒண்ணுமே சொல்லல!

மச்சி:எது நீ பேசிட்ரு்ந்ததா? நமக்கு அதுல்லாம்  intrest  இல்லை மச்சி!

நான்: நான் பேசிட்ருந்ததாவது கேட்டியா?

மச்சி : மச்சி நமக்குஎதுக்கு இந்த வீண் வேலை! நல்ல வேலை இருக்கு! அப்படியே saturday நல்லதா ஒரு சினிமா பார்த்துட்டு நைட்  சரக்கு சாப்டுட்டு sunday மதியம் வரைக்கும் தூங்கிட்டு  ஜாலியா life enjoy பண்ணனும் ! அதை விட்டுட்டு ஊர் நியாயம் எல்லாம் நமக்கெதுக்கு !

நான்: அப்ப எவன் நாசமாப் போனாலும் கவலைபட மாட்ட! அதானே !

மச்சி : அப்படின்னு இல்லை மச்சி நம்ம life நாம பார்த்துக்கறோம்! நான் ஒண்ணும் பகத் சிங்கோ !  இந்த ஈழ்த்துக்கு உயிர் விட்டாரே முத்துகுமார் அவர் மாதிரி ஒண்ணும் தியாகி இல்லை! ஜஸ்ட் IT  Prefessional.

நான்: அப்ப school ல படிச்ச தியாகி, நாட்டுபற்று இதெல்லாம்.

மச்சி : அதெல்லாம் வேஸ்ட் மச்சி !  இப்ப எனக்கு school லயே Java, .NET சொல்லி கொடுத்திருந்தாலாவது இப்ப நிறைய சம்பாதிக்கலாம், நல்ல வேலை கிடைக்கும். இப்ப என்ன  interview ல பகத் சிங் பத்தியா கேட்குறான். உனக்கு interest இருக்கு ! ஓ.கே குட். செய்யி

நான்: ஓ.கே மச்சி பை ! போன் பணணுறேன் பை!என்று கூறி விட்டு ஒருபுறம் “பாஸ்1” பற்றி மனதில் மகிழ்வுடனும், மறொருபுறம் என் மச்சியின் பி்ழைப்புவாத கேடுகெட்ட வாழ்க்கை பற்றிய அருவருப்புடனும் என் வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகு மற்ற வேலைகள், சந்திப்புகள் எல்லாம் முடிந்து அன்றைய  பொழுது நன்கு முடிந்தது.

மறுநாள்,  காலை 7 மணி்க்கு தான் விழித்தேன். எழுந்து  ,முகம் கழுவி, பல் துலக்கி விட்டு  அருகிலுள்ள டீ கடையில் டீ சாப்பிட்டு, ஒரு ஹிந்து பேப்பரும், தினத்தந்தியும் வாங்கிக் கொண்டு  அறை சென்றேன்.

அறை செல்வதற்குள் குடித்த டீ தன் வேலையை தொடங்கியிருந்தது. சென்றவுடன் ஹின்டுவ எடுத்துக் கொண்டு “TOILET” ல் சென்று அமர்ந்து எல்லாம் நன்கு முடிந்த பிறகுஎழுந்து கொண்டு flush ஐ அழுத்தினேன்.

திடீரென்று என் மச்சியின் முகம் எனது மலத்துடன் சேர்ந்து த்ண்ணீரால் அடித்து செல்லப்பட்டது.

இல்லை!  இல்லை!

எனக்கே புரியவில்லை !

மச்சியின் முகம் எப்படி கக்கூஸ் குழியில் !

நீங்களே சொல்லுங்கள் !

என் மச்சியின் முகம் ஏன் கக்கூஸ் குழியில் தெரிந்தது எனக்கு ?

நீங்களே சொல்லுங்கள் !

மலம் போன்று அருவரு்ப்பானவனா என் மச்சி?

Advertisements
5 பின்னூட்டங்கள்
 1. அருமை தோழர், மிகச்சிறப்பான நடை. இப்படிப்பட்ட நடைதான் தானே அதில் பங்கு கொண்டது போன்ற உணர்வினை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நபர்கள் மலத்தை விட கேவலமானவர்கள். நான் பணி புரிந்த நிறுவனத்தில் கூட பல கருமாந்திரங்களை பார்த்திருக்கிறேன். கலகத்தில் சில கதைகள் அதைப்பற்றி எழுதியிருந்தாலும், உங்களின் பதிவு மீண்டும் எழுதத்தூண்டுகிறது.

  கலகம்

 2. விவாதத்துல பார்த்து ரொம்ப நாளாச்சுங்களே, வாங்க எல்லா தளத்துக்கும்

 3. பெரும்பாலான இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
  பள்ளிக்கூடத்தில் ஜாவா படித்தாலும், ஜாவா படித்த அனைவருக்கும் வேலை கிடைக்காது. வேலை கிடைத்தாலும் திடீரென வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இவைகளெல்லாம் தனி திறமையினாலோ அல்லது திறமையின்மையினாலோ வருவது அல்ல, என்பதை அடுத்த சந்திப்பில் உங்கள் மச்சிக்கு விளக்க முயலுங்கள் தோழர்.

  தோழமையுடன்
  செங்கொடி

 4. சர்வதேசியவாதிகள் permalink

  தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: