Skip to content

ஏகாதிபத்தியம் ‍முதலாளித்துவத்தின் உச்சகட்டம்

ஏப்ரல்24, 2011

ஏகாதிபத்தியம் ‍முதலாளித்துவத்தின் உச்சகட்டம்

ஏகாதிபத்தியம் தனது உலகப் பங்கீட்டுக்கான போர்களை நடத்துமளவு ஐரோப்பிய நாடுளின் பொருளாதர முரண்பாடுகள் வளர்ந்து விட்ட காலத்தில்,  இரண்டாம் அகிலத்தின் தலைவர்களில் சிலர் சமூக‍‍ தேசிய வெறி கொண்டு போரில்  உலக பாட்டாளி ஒற்றுமையை பேணாது, தனது நாட்டின் முதலாளித்துபவத்தின் பின் வால் பிடித்து சென்றனர். அதுமட்டுமின்றி அதற்கான விளக்கங்களையும் மார்கசியட்தின் பெயரில் கொடுத்தனர். அத்தகைய சந்தர்ப்பவாதிகளை மார்கிசிய வழி நின்று உலக பொருளதார நிலைமைகளை 1000க்கும் மேற்பட்ட நூல்கள், அரசு‍ புள்ளிவிவரங்களின் துணை கொண்டு அம்பலப்படுத்தியும், உலக பாட்டாளி வர்க்க ஒற்றுமை, மற்றும் புதிய அரசியல் தந்திரங்களையும் வகித்தார். அதில் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான  போர் காலத்தில் பாட்டாளி வர்க்கமானது, தேசிய முத‌லாளிகளுக்கு வால் பிடிக்காது, உள் நாட்டு கலகங்களின் மூலம் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை தோற்றுவிக்க வேண்டும் எனவும் கூறினார். அதுவே மார்க்சிய வழி. அந்த நூலின் தொகுப்பை கீழ் காண்போம்.

1. உற்பத்தியின் ஒன்று குவிப்பும் ஏகபோகங்களும்

தொழிற்புரட்சி கண்ட ஐரோப்பிய கண்டமானது, மேலும் பல அறிவியல் கண்டு பிடிப்புகளின் உதவியுடன், உற்பத்தியை அதிகரிக்க செய்தன, தடையற்ற வாணிபமாயிருந்த அவைகளின் அள‌வு கடந்த, ஒழுங்கமைக்கப்படாத (தேவை, உற்பத்தி சம அளவில்லாத), முத்லாளிகளுக்கிடையிலான கடும் போட்டியின் காரண்மாகவும், 1860 மேல் முத்லாளித்துவமானது பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தன. இவை முதலாளிகளுக்கு நட்டங்களை ஏற்படுத்தின. உச்சகட்ட உற்பத்தியின் காரணமாக பொருளாதார மந்தமும் ஏற்பட்டது. இன்னிடலையில், ஒரே தொழிலில் ஈடுபட்டிருந்த (எ.கா பருத்தி) முத‌லாளிகள் தங்களுக்குள் மூலப்பொருள் விலை நிர்ணயம், உற்பத்திப் பொருள் விலை நிர்ணயம், சந்தை பங்கீடு இவற்றில் உடன்பாடுகள் செய்து கொண்டன (கார்ட்டல்). இதன் மூலம் திடீர் ஏற்ற இறக்கங்களையும், விலை வீழ்ச்சி போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து தங்களின் பருத்த நட்டமடைவதிலிருந்து மீண்டன. இதன் மூலம் கார்ட்டல்களுக்குள் வ‌ராத கம்பனிகளுக்கு அச்சுறுத்த்லாக விளங்கின.  (தடையற்ற வாணிபத்திலிருந்து,  கட்டுப்படுத்தப்பட்ட வாணிபத்திற்கு மாறின‌). இந்த முறை ஒரு துறையில் மட்டுமல்லாது அனைத்து (எஹ்கு, நிலக்கரி, பருத்தி, மின்சாரம்)தொழிற்துறைகளிலும் நடந்தது. இதன் மூலம் அதிக லாபமடந்த முதலாளிகள் கூட்டு நடவடிக்கைகளை (சிண்டிகேட்டுகள், ட்ரச்டுகள்)மேர்கொண்டனர். 1870 களிலிருந்து இந்த முறை இருந்தாலும், 1885 க்கு பிறகு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தம் இப்போக்கை துரிதப்படுத்தியது. அதாவது முதலாளித்துவமானது (பல முத‌லாளிகளின்) ஏகபோக‌மாகி விடுகிறது. இவர்கள் ஒட்டு மொத்த மூலப்பொருட்கள் , சந்தையில் சிறு, குறு முத்லாளிகளை நெருக்கி, பயமுறுத்தி தங்களுடன் இணைத்துக் கொண்டனர் . இவ்வாறாக புதிய வார்த்தைகல் புழக்கத்துக்கு (பங்குகள், பிணையங்கள், பணக்கெடுக்கள், ஈவுகள், லாபப்பங்கீடுகள் ) வருகின்றன. இதன் மூலம் கருவிகலை மேலும் நவீன மயமாக்குதல், புதிய கண்டு பிடிப்புகலுக்கு காப்பு வரி பெறுதல், இன்ஸுரன்சு போன்றவை பெருகி வளர்கின்றன. இவ்வாறாக வளர்ந்து சில ஏகபோகங்களே நாட்டின் ஒட்டு மொத்த வளங்களையும் (எக்கு, நிலக்கரி) கைப்ப்ற்றிக் கொள்கின்றனர்.  நாட்டின் வளங்கள், தொழிற்துறை, மட்டுமல்லாது, ஒப்பந்தங்களின் மூலம் வெளி நாட்டில் உள்ள மூலங்களையும் ஒட்டு மொத்தமாக கைப் பற்றிக் கொள்கின்றனர் (பெட்ரோல்). மேற்கண்டபடி, ஏகபோகங்களாக வளர்ந்துவிட்ட முத்லாளித்துவமானது அவற்றின் இயல்பான தடையற்ற சுதந்திர வாணிபத்திலிருந்து, சமூக மயமான, கூட்டு உற்பத்தி முறைக்கு முத்லாளித்துவத்தின் விருப்பத்திறுகு மாறாகவே நெருக்கடிகளை சமாளிக்கும் பொருட்டு வளார்ந்து விட்டன. ஒட்டு மொத்த தொழிற், மூலவளங்கல், சந்தைகளை கட்டுப்படுத்தியுள்ள சில கார்ட்டெல்கள் திடீர் விலையேற்றங்கள், செயற்கையான தில்லுமுல்லுகள் மூலம் பெருமளவு லாபங்களை குவித்தனர். இவ்வாறு ஏகபோகமாய் வளர்ந்த முத்லாளித்துவத்திற்கு துணை கருவியாய் இருந்தது வங்கிகளும் ஆகும். அவற்றின் பங்கினை கீழே காண்போம்.

2. வங்கிகளும் ஏகாதிபத்திய உருவாக்கத்தில் அவற்றின் புதிய பங்கும்


வங்கியின் பிரதான வேலை: செயலற்ற மூலதனத்தை (சும்மா வீட்டு பெட்டியில வச்சிருக்கறதுக்கு பதிலா) செயல் முனைப்புள்ள தொழிற்கடன்களுக்கு அளித்து அவற்றை மூலதனமாக்குதல்.
மேற்கண்ட தலைப்பில் நாம் உற்பத்தியின் ஒன்று குவிப்பு ஏகபோகமாய் வளர்ந்த கண்டோம். மிகப்பெரும் தொழிற் நிறுவனங்களாக வீங்கி வளர்ந்த இவைகளுக்கு பெரிய மூலப்பொருள், (சுரங்கக் கைப்பற்றல்கள், சொந்த தாண்டவாளங்கள், கப்பல்கள்) அல்லது தொழிற்கட்டமைப்பு இவற்றை உருவாக்க இதுவரையில் அல்லாத வகையில் நிதிதேவை ஏற்பட்டன. இத்தேவையை வங்கிகள் பூர்த்தி செய்தன. பெரிய தொழிற் நிருவனங்களின் மூலதனம் மட்டுமின்றி, வங்கிகளைன் சிறு, குறு, தொழிலாளர்களின் சேமிப்பு ஆகிய‌வற்றை இந்த ஏகபோக நிறுவன‌ங்களில் பங்குகளாக மூலதனமிட்டன. (அரசு சட்டங்களின் மூலம்  சிறு சேமிப்புகளை, அஞ்சலக சேமிப்புகளை தடை செய்து அவற்றையும் தன் வசமாக்கிக் கொள்ள முனைந்தன என்றால் அவற்றின் தாகத்தை புரிந்து கொள்ளுங்கள்). இவ்வாறாக சிதறுண்ட பல்லாயிரம் பொருளாதார மையங்கள் சில ஏகபோக வங்கிகளுக்குள் அடக்கம் கொண்டன. வங்கிகள் தொழிற் ஏகபோகங்களின் கூட்டு இவ்வாறு வளர்ந்து வீங்கியது. வங்கிகளானது தனது பணம் மாற்றும் வேலையை விடுத்து கம்பனிகளின் பங்குகளை மாற்றும் பங்குச் சந்தைகளாகி விட்டன. மேலும் அரசுகளின் மூலம் பிணையங்களை வெளியிட்டு வெளி நாட்டு தொழிற் நிறுவங்கள், முல வளங்களையும் கைப்பற்றிக் கொண்டன. தொழிற் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை வாங்கிவிடுவதன் வாயிலாக ஒரு தொழிற் நிறுவனத்தின் தலைவராக அத்தொழிற் பற்றி ஏதுமறியா வங்கி அதிபர்கள் வருவது நடந்தேறின.  இவ்வாறு தொழிற் நிறுவனங்களை வங்கிகள், அல்லது நிதி நிறுவனங்கள் கைப்பற்றின. பெரும் சூதாட்டங்கள் தில்லுமுல்லுகள் வாயிலாக சமூகத்தில் பங்குகளில் பெரும் கொள்ளை யடித்தன. இவ்வாறாக 1870‍ ‍லிருந்து 1890 வரையில் நடைபெற்ற தொழிற்துறை இணைவுகள், ஏகபோகங்களின் உருவாக்கம், வங்கி, ,மூலதனக் கொள்கைகளில் மாறுதல்களைக் கோரின. 1900 வாக்கில் தொழிற்துறை மூலதன லாப ஒன்று குவிப்பானது, வங்கிகளின் இணைவு, ஒன்றுகுவிப்பையும் துரிதப்படுத்தி வங்கிகளின் ஏகபோகத்தை உருவாக்கின. அதாவது தொழிற்துறை ஒன்றுகுவிப்பானது தொழிற்துறை ஏகபோகங்களாக ஆனதைப் போல் வங்களில் நிதி மூலதன ஒன்று குவிப்பு வங்கிகளின் நிதி மூலதன ஏகபோகத்தை உருவாக்கியது.

3. நிதி மூலதனமும் நிதியாதிக்க கும்பலும்

உற்பத்தியின் ஒன்று குவிப்பிலிருந்து தொழில் ஏகபோகங்க்களும், அவற்றுடன் வங்கிகள் இணைந்ததானது நிதி மூலதனத்தை தோற்றுவித்தது. தொழில் மூலதனமாக இருந்து முதலாளிகளால் உபயோகிக்கப்படவும், கட்டுப்படுத்தப்பட்ட மூலதனம் வங்கி அதிபர்களால் நிர்வகிக்கப்படுவதும், உபயோகிக்கப்படுவதுமாக மாறி விட்டது. இந்த நிதி யாதிக்க கும்பல்கள் தங்களது போட்டியாளர்களின் பங்குகளில் 40 சதவீதம் மட்டும் பெற்று விட்டால் போதும் தன் போட்டியாலரை தன் முடிவுகளுக்கு கட்டுப்படுத்தி விடுகின்றன.
தனது உள் நாட்டு  போட்டியாளரை மட்டுமின்றி வெளி நாட்டுன் போட்டி நிறுவங்களை வாங்குவதன் மூலம்  உலக அளவில் தன் ச்திரத்தன்மையை நிலை நிறுத்திக் கொண்டன. ( எ.கா ராக்பெல்லர், ஸ்டான்டர்ட் ஆயில் , டட்சு வங்கி முதலியன. உலகின் பெரிய அ எண்ணய் வளங்களை தன்  கட்டுக்குள் கொண்டு வந்தன.) மேலும் இந்த நிதியாதிக்க கும்பல்கள் சிறு குறு கண்டுபிடிப்புகளை எந்த விலை கொடுத்தேனும் வாங்கி ஆராய்ச்சி துறைகளை தன் வசப்படுத்தின ( எ,கா தாம்சன், ஜெனெரல் எலெக்ட்ரிக் ). இவ்வீதம் உலக அளவில் நிதியாதிக்க கும்பல்களின் வருமானமும் போட்டி மாபெரும் வளர்ச்சி அடைந்தன.

உலக அளவில் சில ட்ரஸ்டுகள், நிதியாதிக்க கும்பல்கள் ஒரு தொழிற்துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் பரும் ஆதிக்கம் செலுத்தி கொழுத்தன. பத்திர வெளியீடுகள் மூலம் பெரும் லாபம் சம்பாதித்தன. 1910 ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி இவை நான்கும் உலகின் மொத்த நிதி முலதனத்தில் 80 சதவிகிதத்தை கைவசம்  வைத்திருந்தன. இவ்வகையில் உலகின் ஒட்டு மொத்த வாணிப நிதி பரிவர்த்தனையில் பெரும் லாபம் பெற்று வளர்ந்தன. மூலதனத்தின் ஏனைய எல்லா வடிவங்களின் மீதும் நிதி மூலதனமானது ஆதிக்கம் பெற்று விட்டது.

4. மூலதன ஏற்றுமதி

சுதந்திர, தடையில்லா பழைய முதலாளித்துவத்தின் குறியீடாக விளங்கியது வாணிப ஏற்றுமதி, ஆனால் ஏகபோகமாகிவிட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிதி ஏகபோகமாயும் வளர்ந்து விட்ட அவை நிதியை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வளர்ந்து விட்டன. 1875 முதல் 1900  வரை பெரும் முதலாளித்துவ நாடுகளாக வளர்ந்து விட்ட அவை தனிப்பெரும் சுயேச்சை முத்லாளித்துவ நாடுகாளாக வளர்ந்து வந்தன. அதே காலத்தில் முடியரசுகளின் காலணிகளாயும், அரைக் காலணிகளாயும் , ஆசிய நாடுகளௌம், அரை முத்லாளித்குவ நாடுகளாய் ருசியா முதலியனவும் இருந்தன.

அபரிமிதமாய் ஏற்பட்ட மூலதன திரட்சி நிதியாதிக்க கும்பல்கள், நிதியை ஏற்றுமதி செய்யத்தொடங்கின. தங்களுடன் பிற்பட்டனாடுகளுடன் மட்டுமல்லாது தங்களின் போட்டி நாடுகள்டையேயும் நிதி எற்றுமதி தொடங்கின. இதற்காக அவற்றின் வங்கி கிளைகளின் எண்ணிக்ககள் ஆயிரக்கணக்கில் அதிகமாயின. மேலும் அவைகளே பிற்பட்ட நாடுகளில் வங்கிகளைய் தொடங்கி தொழிற்துறை நிறுவ்பனங்களையும் உற்பத்தி செய்தன, இதற்கான மூல காரணங்கள் : குறைந்த விலையில் மூலப்பொருட்கள், குறைந்த விலையில் நிலம், குறைந்த கூலி ( இந்தியாவைதான் இப்போ இருக்குற சாப்ட்வேர் கம்பனிகள் மாதிரி )

இவ்வாறு நிதி ஏற்றுமதி செய்யும் பொழுது அந்தந்த நாட்டின் அரசு, தொழிற்துறையினருடன் சில உடன்படிக்கைகளையும் செய்து கொண்டன.  அதாவது அந்த நாட்டில் புதிதாக அமையவுள்ள சுரங்கங்கள், தண்டவாளங்கள், துறைமுகம் , கப்பல்கள், தொழில்சாலைகள அமைக்கும் பணியை தனது நாட்டின் தொழிற் நிறுவனங்களுக்கு தர வேண்டுமென நிர்ப்பந்தம் செய்தன.
இவ்வகையில் இரட்டை வழியில் அந்த நாடுகளை சுரண்டின. ( நினைவில் கொள்க : இந்திய சீன கடன்கள் இலங்கைக்கு தரப்படதும், தமிழின அழிப்பில் இலங்கைக்கு உதவியது, பிறகு துறைமுகம், பெட்ரோல் நிறுவனங்கள் நிறுவப்பட உள்ளது ).

5. முதலாளித்துவக் கூட்டுகளிடையே உலகம் பங்கிடப்படுதல்

1600களிலேயெ சந்தைக்காக உலகம் பங்கிடப்பட்டிருந்ததானது, நிதி மூலதன ஏற்றுமதியின் மூலம் உலகின் மூலவளம், தொழிற்துறை, நிதி பரிவர்த்தனை அனைத்தையுமே தன்வசம் உலக ஏகபோக முதலாளித்துவ நாடுகள் கொண்டு வந்து விட்டன. மூலத ஏற்றுமதியை தொடர்ந்து வெவ்வேறு நாட்டு மூலதன கும்பல்களுக்கிடையில் சர்வதேச ரீதியில் உடன்பாடுகளும், இணைவுகளும் ஏர்பட்டன. உலக அளவில் மீ-ஏகாதிபத்தியதுக்கான போட்டி ஆரம்பமாயிற்று. உலக அளவில் நிதி ஏற்றுமதியை அதிகரித்தல், சந்தைகள், மூலவளங்கள் கைப்பற்றுதல் இவற்றுக்கான போட்டி அதிகர்ரிக்க தொடங்கியது.உதாரணத்துக்கு ஜெனெரல் எஏலெக்ட்ரிக் கம்பனி 175 ம்ய்தல் 200 வரையிலான சிறு குறு கம்பனிகளைக் கைப்பற்றி அவற்றிம் புதிய கண்டுபடிப்புகளை தனதாக்கிக் கொண்டு, தன் கம்பனியை ஜெர்மன் (ஐரோப்பிய சந்தைகள்) மற்றும் அமெரிக்கா (அமெரிக்கா, தென் அமெரிக்க, கனட சந்தைகள்) என இரண்டாக பிரித்துக்  கொண்டு உலகின் போட்டியாலர்களை இல்லாதொழித்ததுடன் மட்டுமுன்றி உலகின் பெரிய நிறுவனமாக வளர்ந்தது. இதற்காக அந்தந்த நாட்டு  அரசுகளுடன் செல்வாக்கு, அரசியல் புல்லுருவித்தனங்கள் அனைத்தையும் செய்தன. இவ்வாறாக உலகின் ஏகபோக நிதிமூலதன கும்பல்கள்  சந்தைகள் மட்டுமின்றி தொழிற் நிறுவனங்கள் , வங்கிகள்,மற்ற நிதியாதிக்கக் கும்பல்களை நிதி நிறுவனங்கள், வங்கிகள், அவைகட்கு உட்பட்ட எண்ணெய் வயல்கள், நிலக்கரி, எக்கு, இத்யாதிகள் என கைப்பற்றின. இவற்றில் சில ஏகபோக நிறுவனக்களுக்கிடையே போட்டிகள் அதற்காக அரச பலத்தை (படை) உபயோகிப்பது எனவும் தொடங்கின. எடுத்துக்காட்டாக ராக்பல்லரின் ஸ்டாண்டர்டு எண்ணெய் நிறுவனத்திற்கும் ஜெர்மனின் டாச்சு வங்கிகளின் எண்ணெய் நிறுவனத்திற்கும் போட்டி மிக பெரிய அளவில் வளர்ந்தோங்கியது. ஆனால் ராக்பல்லர் தனது ஜெர்மன் நிதிப்பங்குகளை பின் வாங்கிவிடுவதாக மிரட்டியதன் மூலம் டாச்சு வங்கியின் போட்டியை ஜெர்மன் அரசின் உதவியுடன் தோற்கடித்தார். இதே பொல் துறைமுகங்களின் பங்கீடு அரசின் உதவியுடனும், த்ண்டவாளங்கள் ஆகியவை பிரிக்கப்பட்ட்ன. இதற்காக உலக அரச-தனியார் ஏகபோகங்கள் உலகை மொத்தமாக தங்களுக்குள் ஒப்பந்தங்களின் மூலம் பங்கிட்டுக் கொண்டன. ஒப்பந்தங்களின் மூலம் 1884ல் இங்கிலாந்து 66 %மும், ஜெர்மனி 27 %மும், பெல்ஜியம் 7% சந்தைகளை பங்கிட்டிருந்தன. அதேபோல் தண்டவாள கார்ட்டல்களிடையே உலகில் இங்கிலாந்து 53% மும், ஜெர்மனி 28% மும், பெல்ஜியம் 17% பங்கிடப்பட்டிருந்தன. 1897 த்ண்டாவாளங்களில்  45 % நிதிப்பங்குகளை வைத்திருந்த ஜெர்மனி 1910 ல் நூறு சதவீதப்பங்குகளை வாங்கிவிட்டது. இவ்வாறு உலக பொருளாதார பங்கீட்டின் அடப்படையில் முதலாளித்துவக்கூட்டுகளிடையே குறிப்பிட்ட சில உறவுகள் முன்னேறி வந்தன.அதே போல் காலணிகள், செல்வாக்கு மண்டலங்கள் அடிப்படையிலான அரசியல் உறவுகல் அரசுகளிடையே உருவாகி வந்தன. இதை தான் சந்தர்ப்பவாதிகள் ஏகாதிபத்தியம் அமைதியை உலகுக்கு கொண்ருவதாக கூறினர். அது உண்மையல்ல் பொருளாதார உறவுகள் சமன் நிலையில் என்றும் இல்லை, அவை ஜெர்மனி, ருச்சிய, ஜப்பான் நாடுகளில் பெருமளவு பெருகி வருகின்றன. அவற்றின் உற்பத்தி சகிதிகலில் மாற்றம் நிச்சயம் உறாவுகளில் மாற்றம் கோரும், அப்போது அவற்றின் சக்திகளின் பலப்பரிட்சையில் உலகம் மறு பங்கிடப்படும் போருக்காக அவை அவற்றி அழைத்துச் செல்லும்.

6. வல்லரசுகளிடையே உலகம் பங்கிடப்படுதல்.

மேற்கண்ட தரவுகளின் மூலம் நாம் உலகமானது முழு அளவில் அரசு மற்றும், முதலாளித்துவங்களினிடையே (அரசின்) துணையுடன் பங்கிடப்பதை கண்டோம். இது உலகம் ஒரேயடியக பங்கிடப்பட்டு விட்டது என்பதனை குறிப்பதல்ல. மாறாக மறு பங்கீட்டை கோரி நிற்கிறது என்பதே ஆகும். ஏகபோகத்துக்கு முந்தைய சுதந்திர, தடையற்ற வளைச்சி 1860, 1870 களில் உருவாகி உச்சத்தை அடைந்தது. சரியாக அதே கால கட்டத்தில் தான் சந்தைக்கான காலணியக் கைப்பற்றல்கள் உருவாகி வளர்ந்தன. காலணிக்கைப்ப்ற்றல்களும், நிதி மூலதன ஏற்றுமதியும் ஒரே கால கட்டத்தில் உருவாகி வளர்ந்தது அவை இரண்டையும் உலகப்பங்கீடில் அவற்றின் பணியை இணைத்து விட்டது. உள் நாட்டு பொருளாதார நெருக்கடிகள், மந்தம் ஆகியன காலணிகளை (வரிகளிலிருந்து பெருத்த செலவு ஆவதால்) எதிர்த்து வந்த முதலாளித்துவ அறிஜீவிகளையே, அவற்றின் தேவை அதிகரிக்க வேண்டுமென்ற அளவுக்கு கூற வைத்து விட்டன. பலரிடையே உள் நாட்டில் தொழிலாளி – முத்லாளி பிரச்சினை ஏகாதிபத்தியத்தால் வரவால் தீர்க்கப்படும் என்ற கருத்து அதிகமாகி விட்டது.  உலக அளாவில் பழைய ஏகாதிபத்தியங்கள், புதிய ஏகாதிபத்தியங்கள் , மன்னரை கொண்ட ஏகாதிபத்தியங்கள் (ரசியா, ஜப்பான்)  இவற்றிடையே வளர்ச்சியானது, சிறாக இல்லாது, புதியனவற்றின் அபரிமித்மாக வளர்ந்து வந்ததூ.  நிதி மூலதந்திற்கு முன் படைகளின் மூலம் கைப்பற்றப்பட்ட  காலணிகள், பின்னர் நிதி மூலதன ஏற்றுமதிகளுக்கான உடன்படிக்கைகளின் மூலம் அடிமையாக்கப்படன. (எ.கா அர்ஜென்டினா). பெயரளவில் சுயேச்சைகளாக இருந்து வந்த சிலவும் நிதி மூலதன அரசு தந்திரோபயங்களின் வலைப்பின்னலில் ஏகபொகங்களுக்கு கீழ்ப்படிந்து விட்டன. ஆனால் அரச படை பலத்தின் அடைப்படியிலும் சில நாடுகள் கீழ்ப்படிந்தன ( போர்ச்சுகல்). ஐரோப்பாவில் வலைமையாக உள்ள் நாடுகள் அதன் காலணிகளில் வேறுபட்ட வலிமையுடன் உள்ளன. ஆகவே நிதி ஏகபோகங்கள் தனது நாட்டு அரசுகளிடையில் உறவு வைத்துக் கொண்டு சாதகமான அரசியல் நடவக்கைகளை எடுக்க வைக்க சட்டங்கள் இயற்ற  நிர்ப்பந்தித்தன. இந்த நிலையில் இன்னும் அளவில்லாத சுரண்டல்களுக்காக  நம்பிக்கை கொண்டு நிதி ஏற்றுமதி செய்வதானது நிதிஏகபோக – அரசு களின் கூட்டுகளிடையே போட்டியையும், அரசியல் நிலைமைகளை உறவுகளை தன் சக்திக்கேற்ப மாற்றிக் கொள்ளவும் மட்டுமே முனையுமே அன்றி சமாதானத்தையல்ல.     

7. முதலாளித்துவத்தின் தனியொரு கட்டமாகிய ஏகாதிபத்தியம்
 (முந்தைய தலைப்புகளின் தொகுப்பு)   

அ ) தடையில்லாப் போட்டியின் வளர்ச்சி –> முதலாளித்துவ ஏகபோகம்
ஆ ) சிறு, குறி தொழில் நிறுவங்கள் –> பெரும் நிறுவனங்கள்
இ ) மூலதன ஒன்றுகுவிப்பு ->கார்ட்டல்கள், சிண்டிகேட்டுகள்-> மூதன ஏகபோகங்கள்+வங்கிகளின் கூட்டு -> ஏகபோக நிதியாதிக்க கும்பல்கள்
ஈ ) பண்ட ஏற்றுமதி — > நிதி மூலத ஏற்றுமதி
எ) எளிய பொட்டிகள், முரண்பாடுகள் –> சிக்கலான, முரண்பாடுகள், பூசல்கள்
ஏ ) உள் நாட்டு வங்கிகள் (அரச மூலதனம் குறைவு) –> அரசு – நிதியாதிக்க ஏகபோகம்

உ ) வங்கி மூலதனம்+ தொழிற்துறை மூலதனம் –> நிதிமூலதனம் மட்டுமே தொழிற்துறையை கட்டுப்படுத்துதல்

பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு வளர்ந்து விட்டது. நிதிமூலதன ஏற்றுமதியின் மூலம் இரட்டை முறையில் சுரண்டல் (கடனுக்கான வட்டி, திட்டப்பணிகளை நிறைவேற்றுதல் ) பழைய பண்ட ஏற்றுமதியில் இருந்து முற்றும் வேறுபட்டு விட்டது. முதலாளித்துவ ஏகபோகங்கள் தன் நாட்டுஅரசுகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு ( நிதி மூலதன, காலணி, ராணுவ நடவடிக்கைகளுக்காக) உலகையே தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன. முலதன ஏற்றுமதியானது உலகப்பங்கீட்டை அளவுரீதியான வளர்ச்சியில் இருந்து பண்புரீதியான மாற்றத்துக்கு கொண்டு வந்து விட்டது. மேலும் தனது எதிர்காலவளர்ச்சிக்கு தடையாக நிற்கும்வளர்ந்து வரும் நாடுகள், ஏற்கனவே வல்லரசாக உள்ள நாடுகள் ஆகியவற்றின் பலத்தை குன்றச்சய்ய பல தில்லுமுல்லுகளையும், ராணுவ நடவடிக்கைகளையுமே அவை நம்பி நிற்கின்றன.   இவ்வாறாக வளர்ந்து நிற்கும் ஏகபோக முதலாளித்துவத்தின் உச்சகட்டத்தை உடைத்தெறிய உலகப்பாட்டாளி ஒற்றுமையை பேணாது தேசிய வெறியின் பின் நின்று கொண்டு ஜெர்மன் முதலாளித்துவத்தின் வாலாகிப்போனார் கார்ல் காவுத்ஸ்கி. அளவுரீதியில் பெருகி வளர்ந்து  பண்புரீதியில் ஏகாதிபத்தியம் எனும் புதிய பரிமாணத்தில் வளர்ந்து நிறபதை அது ஒரு  முதலாளித்துவத்தின் ஒரு வடிவமே  என தவறாகமதிப்பிடுகிறார் காவுத்ஸ்கி. அது மட்டுமின்றி ஏகாதிபத்தியமானது நிதிமூலதனமாக மாறி நிற்கையில் அதை தொழில் மூலதனமகவும், பிற்பட்ட நாடுகளை மட்டுமின்றி, தனக்கு முற்பட்ட நாடுகளையும் நிதியாதிக்கத்தின் மூலம் ஆதிக்கம் செய்யும் நிலையில் அவை விவசாய நாடுகளை மட்டுமே கைப்பற்றுவதாகவும் தவறாக கணிக்கிறார் காவுத்ஸ்கி. ஏகாதிபத்தியங்களின் சில உடன்படிக்கைகளை முன்னிறுத்தி அவை ஒரு மீ-ஏகாதிபத்தியமாக ஒருங்கிணைந்து விட்டதாகவும் கணிக்கும் வேளையில் அவை தன் சக்தி ரீதியில் பெருமளவு வளார்ந்து வருவதியும் அவை நிச்சயம் மறு பங்கீட்டைக் கோரும் என்பதையும் காணத் தவறுகிறார். இவ்வாறு மார்க்சியத்தின் வழி நில்லாது காவுத்ஸ்கி திசை மாறி செல்கிறார் முதலாளித்துவத்தின் பின்.

8 .முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் அழுகலும்

நிதிமூலதன ஏற்றுமதி சகாப்தமனது உலகின் மிகப்பெரிய வல்லரசுகளின் நிலையை தொழிற்துறையை முற்றிலும் அவற்றின் காலணிகளை சார்ந்ததாக மாற்றி விட்டது. உதாரணமாக 1900 க்குபிறகு பிரிட்டனின் மொத்த வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை உள் நாட்டில் இருந்தும், மீதி ஐந்து பகுதியை அதன் காலணிகளில் இருந்தும் பெறுகிறது. 1865லிருந்து 1898க்குள் இங்கிலாந்தின் பொருளாதார நிலையில் தேசிய வருமானம் 200%மும், அதே கலகட்டட்த்கில் அதன் கஆலணிகளில் இருந்து கிடைக்கும் நிதி, தொழில் வருமானம் 900% சதவீதமும் என வளர்ந்து இருக்கிறது. இது உலகமானது சிலகடுவட்டி அரசுகளாகவும், மற்றவை அதன் கடனாளிகளாகவும் மாறிவிட்டதை காட்டுகிறது. நிதிமூலதன வல்லரசுகளான இவை அவற்றின் தொழில் முதலீட்டை நிதிமூலதன ஏற்றுமதியாக அதன் காலணி நாடுகளில் கொட்டி விடுவதன் மூலம் தன் நாட்டில் வேலை வாய்ப்பை குறைக்கின்றது. இப்பிரச்சினைகளை எழுப்பும் தன் நாட்டு தொழிலாளர்களை பல்வேறு சலுகலை லஞ்சமாக கொடுத்தும்,விலைக்கு வாங்கியுமவர்களை சமாளிக்கிறது. மேலும் அவற்றின் காலணிகளில் பாதுகாப்புக்கு அந்தந்த நாடுகளின் மக்களையே பணிக்கு அமர்த்தி விடுகிறது( எட்டப்பன்). இவ்வாறு தங்களின் தேசிய தொழில்களை அழித்தும் அதற்கான எதிர்ப்புகளை அதன் கீழ் நிலை வர்க்கங்களுக்கு லஞ்சங்களின் மூலம் திசை திருப்பியும் ( இப்போ டீவி , மிக்ஸி, கிரன்டர் தர்ற மாதிரி) , தங்களால் நசுக்கப்படுவோரையே திரட்டி படைகளை திரட்டுவதும் அவற்றுக்கு தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை செலவிடுவதும் என முதலாளித்துவம் பல புல்லுருவித்தனக்களை செய்து அழுகி வரும் நிலையில், தன் தேசிய பாட்டாளிகலுக்கு உலகக்கொள்ளையில் இருந்து சில சலுகைகளை காட்டி  உலக பாட்டாளிகளிடையே பிரிவை உண்டாக்குகிறது. அதற்கு தேசிய வெறியூட்டியும் முதலாளித்துவ வளர்ச்சியை நாட்டின் சமூக வளர்ச்சியாகவும் காட்டி அழுகலுக்கு புண்ணுக்கு புனுகு பூசும் வேலைகளை முதலாளித்துவ அறிவுஜீவகள் மட்டுமின்றி பாட்டாளி வர்க்காறிவுஜீவிகளாய் இருந்தோரை கொண்டும் செய்து வருகிறது.

9. ஏகாதிபத்தியத்தை பற்றிய விமர்சனம்
( எதிர்நிலை வர்க்கங்கள் ஏகாதிபத்தியத்தை அணுகும் போக்கும் அதன் மீதான சித்தாந்தத் தோன்றல்களும்)

*** தொழிலாளி வர்க்கம் ஒன்றும் சீனத்துச் சுவரால் பிற வர்க்கங்களிடம் இருந்து பிரித்து வைக்கப் பட்டிருக்க வில்லை. ***

ஏகாதிபத்திய காலத்தில், சற்றே மேம்பட்ட வாழ்க்கை அடைந்த, வாழ்ந்து வரும், வளர்ந்து வரும் சில மக்களிடையே குட்டி முதலாளித்துவப் போக்கானது அவர்கள் பாட்டாளிகளாகஏ இருந்த போதும் தலை தூக்குகிறத். ஏனெனில் அவர்கள் முதலளித்துவத்தினருடன் தான் வாழ்ந்தும் வளர்ந்தும் வருகிறார்கள். இவர்கள் உலகமானது அமைதியை மறுத்து,என்றும் வெடிக்கும் நிலையில் உலகை வைத்துள்ள உலக பொருளாதார உண்மைகளை மறந்து விட்டு, உலகின் மற்ற பாட்டாளிகள் சுரண்டபப்டுவதை தேசிய வெறியின் பின்னால் மறைத்தும் விடுகின்றனர். மாறாக வல்லரசுகளிடையே ஏற்படும் கடல்,தண்டவாள உபயோகிப்புக்கான, மூலப்பொருட்களை பெறுவதிலேற்படும் சில உடன்படிக்கைகளை காட்டி ஏகாதிபத்தியம் உலகை சமதானத்துக்கு அழைத்து சென்று விட்டதாக கூறுகின்றனர். முதலாளித்துவத்துவ அறிவுஜீவிகளைப் போல் காலணிகளில் நடக்கும் கொடூரப்போர்கள், நிதியாதிக்க போட்டியில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளையும் சீர்திருத்த சட்டங்களையும் சில நடவடிக்கைகளைஉயும் கோரி நிற்கின்றனர் ( நம்ம டிராப்பிக் ராமசாமி அன்னா ஹசாரே போல). இதில் கார்ல் காவுத்ஸ்கி முதன்மை வகிக்கிறார். பொருளாதார வளர்ச்சி நிலைமைகள், அவற்றின் முரண்பாடுகள் மேலும் தேவைப்படும் சுரண்டல் பிரதேசங்கள், அவற்றிக்கான போட்டி ஆகியவற்றை காண அவர்களின் குட்டி முதலாளித்துவப் போக்கு மறுத்து விடுகிறது. காவுத்ஸ்கி பிர்மாண்டமாக வளர்ந்து வரும் டச்சு வங்கியின் நிதி நிலைமைகளை கணகில் கொள்ளாது, அதன் சில உடன்படிக்கைகள், சீர்திருத்த நடவடிக்கைகளை சுரண்டும் நாட்டின் முதலாளித்துவத்திடமே கையேந்தி நிற்கின்றனர், அல்லது கற்பனை காணுகின்றனர். மேலும் அளவு ரீதியில் வளர்ந்து பண்பு ரீதியாகவே மாறிவிட்ட சிக்கலான, முரண்பாடுகள், ஆதிக்கப்போட்டி மிகுந்த முதலாளித்துவத்திடம் இற்றுப்போய்விட்ட பழைய சுதந்திர,தடையில்லா வாணிபத்தை கோரி நிற்கின்றனர். புற நிலைமைகளின் ஆழத்தை, முரண்பாடுகளை ஆராயாமல் தங்களின் ஆத்மார்த்த விருப்பங்களை தன் எதிரியிடம் வேண்டி நிற்கின்றனர். நிதிமூலதன சகாப்தம் அடுத்தகட்ட சோசலிசத்தால் வீழ்த்தப்பட வேண்டும். அதையன்றி தடையற்ற வாணொபத்தை கோருவது வரலாற்றை பின்னுக்கு இழுப்பதாகும். தடையில்லா வாணிபத்துக்கு பின் செல்லக்கோருவது,போர்கள் தடையற்ற வாணிபத்தை நிலைநிறுத்த நடத்தப்படுவதாககூறுவது, மீ-ஏகாதிபத்தியக் கோட்பாட்டையும், அவை சமாதானத்தை நிலைநிறுத்துவதாக கூறுவது, ஒடுக்கப் படும் தேசங்களின் பாட்டாளிகளினுடனான ஒற்றுமையை கைவிட்டு ஒடுக்கும் தேசியத்திடம் நியாயவானக நடந்து கொள்ள வேண்டுவது என மார்க்சியத்துக்கு முற்றும் மாறுபட்ட வழியில் இங்கிலாந்து, ஜெர்மன் பாட்டாளி தலைமைகளில் சிலர்  மார்கிசியத்தினின்று விலகி செல்று, ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் முரண்பாடுகளை மூடி மறைத்து விடுகின்றனர். இது மார்க்சிய வழியன்று மாறாக போர்க்காலங்களில் பாட்டாளி வர்க்கமானது உள்நாட்டு நெருக்கடியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி தன் நாட்டு பாட்டாளிகளை மட்டுமின்றி, தன் காலணிகளின் தேசிய சுயநிர்ணய உரிமையை விடுதலையை ஆதரித்து நிற்பதே உண்மையான மார்கிசிய வழியாகும்.

10 வரலாற்றில் ஏகாதிபத்தியத்தின் இடம்

முதலாளித்துவத்தில் இருந்து மேலும் உயர்ந்த சமூகப் பொருளாதார கட்டத்துக்கு மாறிச்செல்வதன் இடைநிலையே ஏகாதிபத்தியமாகும். உற்பத்தியின் ஒன்றுகுவிப்பு, –> கார்ட்டல்கள்–> கார்ட்டல்கள் இணைந்து ஏகபோகங்களாக வளர்ந்து விட்டவைகளுக்கும் கார்ட்டல் மயமாகாத தொழில்களுக்கும் இடையே பகைமைகள் கூர்மை அடைந்து வருகின்றன. வங்கி+ஏகபோகக்கூட்டானது உலகின் ஒட்டு மொத்த தொழில், பொருளாதாரம் , பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் அனைத்தையும் ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டு வந்து விட்டன. பழைய காலணிகளுடன் புதிய நிதிமூலத ஏகபோகம் உலகப் பங்கீட்டை துரிதப்படுத்தியதுடன், அவற்றின் முரண்பட்ட வளர்ச்சி மறுபங்கீட்டையும் அதற்காக போர்களையும் கோரி நிற்கின்றது. தொழில்கள் காலணிகளுக்கு மாற்றப்பட்டு, நிதி மூலதனம் மட்டுமே உள்ளதான வல்லரசு நாடுகளின் உள்நாட்டுத் தொழில்கள் நசியத்துவங்கிவிட்டன. பாட்டாளிகள் நிலை மேலும் மோசமடைகிறது. அவர்களின் தலைமையை லஞ்சம் மூலம் ஊழல்படுத்தி தேசிய வெறியின் பெயரால் ஏகபோகத்தை ஆதரிக்க செய்து உலகப்பாட்டாளி ஒற்றுமை குலைக்கப்படும் நிலை உருவாகிவருகின்றது. இவ்வாறு பல்வேறு கூர்மையான,பலம்மிக்க போட்டிகளை எதிர்கொண்டுள்ள இந்த முதலாளித்துவட்த்கின் உச்சகட்டமாகிய ஏகாதிபத்தியட்தினை அதன் அந்திமக்காலமாகக் கருதி அதன் முரண்பாடுகளை கொண்டு முதலாளித்துவத்துக்கான மாற்றை கொணரச் செய்ய வேண்டும். உற்பத்தியானது தேசிய அளவில்லல்லாது உலக அளவில் சமூக மயமாகிவிட்டது, ஆனால் அதன் சுவீகரிப்போ இந்நிலைக்கு சற்றும் பொருந்தாத சில ஏகபோக வல்லரசுகளுக்கானதாகி விட்டது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். முத்லாளித்துவ அறிவுஜீவகளும், சந்தர்ப்பவாதிகளும் கோரும் அமைதியும் போட்டியில்லா உலகமும் சில சீர்திருத்த நடவடிக்கைகளால் ந்டைபெறாது. ஏனெனில் கட்டுப்பாடுகள் தேசங்கடந்ததாகி விட்டது. தேவை பாட்டாளி வர்க்கப்புரட்சியே ! அதுவே அனைவரும் விரும்பும் உலக அமைதியையும், சமாதானத்தையும் கொணரும்.

Advertisements

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: